16 மார்ச், 2011

வண்ணமிழந்த வளநகர்

கவிஞர். மகுடேசுவரன் திருப்பூரின் சாய ஆலை மூடல் பிரச்சனை குறித்து எழுதியது.
நேற்று அலைபேசிய சுதாகர், ‘என்னடா மாப்பிள்ள… ஒரு வீட்டுக் கடன் இருக்கு. ஒரு வாகனக் கடன் இருக்கு. மாட்டிக்கிட்டேன் போலிருக்கே…’ என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இன்று காலையில் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய இளைஞர்கள் இருவர் ‘டையிங்ல வேலை இல்லேன்னுட்டாங்க… ஏதாவது சில்லறை வேலை இருந்தா கொடுங்க… செய்றோங்க…’ என்று கேட்டார்கள். வாரந்தோறும் வீட்டுக்குப் பணவஞ்சல் அனுப்பிய அவர்கள் ஒரே வாரத்தில் பிச்சைக்காரர்களைப் போலாகி நின்றது என் நெஞ்சை அரித்தது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறுபேர் திருப்பூர் போடும் சோற்றைத்தான் உண்ணுகிறார்கள் என்கிற பேருண்மையை நாம் பெருந்தகைமை கொண்டு பார்க்க வேண்டும். பேருந்தை விட்டிறங்கியதும் உங்களை வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஒரே நகரமல்லவா இது ?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=78

நிறமிழக்கும் பின்னல் நகரம்

திருப்பூரைப் பற்றி மணல் கடிகை என்ற நாவல் எழுதிய எம். கோபாலகிருஷ்ணன் தற்போதைய திருப்பூரின் நிலை குறித்து எழுதியது.

இன்றைய திருப்பூரில் உள்ள தொழிலாளிகளில் 60 சதத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், தேனி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி என்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு இடம் பெயர்ந்துள்ளனர். வாரச் சம்பளத்தை நம்பி உள்ள இவர்கள் அனைவரும் அதிகபட்சம் ஒரு மாத காலம் வேலையின்றித் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு அவர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியிருக்காது.

தீர்ப்பு வெளியான நாளிலிருந்து இன்று வரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத ஒவ்வொரு நாளும் அந்நியச் செலாவணி இழப்பு கோடிக்கணக்கில் ஏற்படுவது உறுதி. அதைவிட, தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மறைந்து கொண்டிருப்பது வேதனையானது. திருப்பூர் தனது தொழில் வளர்ச்சியை இழந்துவிடுமா?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=76