31 ஜனவரி, 2014

புத்தகக் கண்காட்சியில் சேர்தளம் அரங்கு


திருப்பூர் புத்தகக் கண்காட்சியில், சேர்தளம் அமைப்பின் சார்பில் செயல்படும், இணையதள அரங்கத்தை மாநகர துணை மேயர். குணசேகரன் திறந்து வைத்தார்.  உடன், திருப்பூர் மாநகர மேயர். விசாலாட்சி மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர். சக்திவேல் ஆகியோர்.

தினமலர் - செய்தி

11வது திருப்பூர் புத்தகத் திருவிழா

31 சனவரி 2014 முதல் 09 பிப்ரவரி வரை திருப்பூரில் திருவிழா!

11வது புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது.


வாசிப்பவர்களுக்கும், வாசிக்க விருப்பம் உடையவர்களுக்கும் மட்டுமில்லாமல், பார்வையாளர்களும் விரும்பும் வகையில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், உலகத்திரைப்படங்கள், நம்ம திருப்பூர் எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி என
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

புதிதாக வாசிக்க ஆர்வமிருப்பவர்களுக்கு என்ன புத்தகம்? என்பது தொடங்கி எந்தெந்த புத்தகங்கள், எந்தெந்த கடைகளில் கிடைக்கும் என்பதுவரை பார்வையாளர்களுக்கு உதவுவதற்காகவே இணைய நண்பர்களுக்கும், சேர்தளத்திற்கும் தனி அரங்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் தேடலை எளிமையாக்க நாங்கள் காத்திருக்கிறோம்...

அனைவரும் வருகவென
சேர்தளம் இணையக் குழுமம் சார்பாகவும், புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழு சார்பாகவும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி!